மேல்நடவடிக்கைக்காக விண்ணப்பம் நிலுவையில் உள்ளது

இந்தப் பக்கத்தில்:

மேலோட்டம்

221(g) பிரிவின் கீழ் மறுப்பது என்பதற்கு, ஒரு விண்ணப்பத்திலிருந்து அத்தியாவசியமான தகவல்கள் விடுபட்டிருக்கின்றன என்று அல்லது நிர்வாக ரீதியிலான காத்திருப்பில் ஒரு விண்ணப்பம் வைக்கப்பட்டிருக்கிறது என்றே அர்த்தமாகிறது. உங்கள் நேர்காணலின் முடிவில் மேலும் தகவல்களுக்காக உங்கள் வழக்கு 221(g) பிரிவின் கீழ் மறுக்கப்படுகிறதா என்பதை உங்களை நேர்காணல் செய்கிற துணைத் தூதரக அதிகாரி உங்களிடம் சொல்வார். அவ்வழக்கு நிர்வாக ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு உட்பட வேண்டியுள்ளதா என்பதை அவ்வதிகாரி உங்களிடம் சொல்வார் அல்லது கூடுதல் தகவல்களைச் சமர்ப்பிக்குமாறு உங்களிடம் கேட்டுக் கொள்வார்.

மேற்கொண்டும் தகவல்கள் தேவைப்பட்டால், அத்தகவல்களை எவ்விதம் சமர்ப்பிப்பது என்பதை அவ்வதிகாரி உங்களிடம் சொல்வார். இந்த நடைமுறையின் ஒரு பகுதியாக, உங்களுக்கு ஒரு எழுத்துப் பூர்வக் கடிதம் கொடுக்கப்படும் மேலும் புதிதாக ஓர் வீசா விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தாமலேயே, வேண்டிக்கொண்ட ஆவனங்களைச் சமர்ப்பிப்பதற்கு உங்கள் விண்ணப்பத் தேதியிலிருந்து உங்களுக்குப் 12 மாத கால அவகாசம் இருக்கும். ஒரு ஆண்டிற்குப் பிறகு, 221(g) பிரிவின் கீழ் மறுக்கப்பட்டதோர் விண்ணப்பம் 203(e) பிரிவின் படி முடித்துக் கொள்ளப்படும்.

அமெரிக்கத் தூதரகம் கூடுதல் தகவல்களை அல்லது ஆவணத்தை வேண்டிக் கொள்கிற பட்சத்தில், 221(g) மறுப்புத் தாளில் அமெரிக்கத் தூதரகம் உங்களுக்குக் கொடுத்துள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றி அத்தகைய ஆவணங்களை நீங்கள் சமர்ப்பித்தாக வேண்டும்.

மற்ற தகவல்கள்

சில வீசா விண்ணப்பங்களுக்கு மேற்கொண்டும் நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது, அதற்கு ஒரு துணைத் தூதரக அலுவலரோடு நீங்கள் கொண்டு நேர்காணலுக்குப் பிறகுக் கூடுதல் காலம் ஆகிறது. உங்கள் நேர்காணலின் போது இதற்கான சாத்தியக்கூறு உங்களுக்குத் தெரிவிக்கப்படும். பெரும்பாலான நிர்வாக நீதியிலான நடவடிக்கையானது உங்கள் வீசா நேர்காணலிலிருந்து 60 நாட்களுக்குள் தீர்க்கப்படுகின்றன. கூடுதலாக நிர்வாக ரீதியிலான நடவடிக்கை எடுப்பது அவசியமாகிற போது, ஒவ்வொரு நிலையின் சூழ்நிலைகளின் அடிப்படையில் அதற்கான நடவடிக்கை எடுக்கும் கால அளவு வேறுபடலாம். உங்கள் வீசாவிற்காக சீக்கிரமாகவே, நீங்கள் பயணிக்க உத்தேசித்துள்ள தேதிக்கு பல நாட்கள் முன்னதாகவே விண்ணப்பிக்குமாறு உங்களுக்கு ஞாபகப்படுத்தப்படுகிறது.

குறிப்பு: உங்கள் வீசா நிலையைக் குறித்து விசாரிப்பதற்கு முன்பாக, உங்கள் நேர்காணல் அல்லது துணை ஆவணங்களை சமர்ப்பிக்கிற தேதியிலிருந்து, இதில் எது பின்னானதோ அதிலிருந்து குறைந்தது 60 நாட்களுக்காவது நீங்கள் அல்லது உங்களது பிரதிநிதி காத்திருக்க வேண்டும். தயவுசெய்து பொறுமையாக இருங்கள்.

பின்வரும் இணையதளத்தில் எந்த நேரத்திலும் உங்கள் விண்ணப்பத்தின் நிலையை நீங்கள் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.