எனது கடவுச்சீட்டு நிலை அறிந்து அதனைத் திரும்பப் பெறுவது
கடவுச்சீட்டு/வீசா சேகரிப்பு இடங்கள்

இந்தப் பக்கத்தில்:


மேலோட்டம்

பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் அவர்களுக்கு நேர்காணல் நடந்த நாளின் மறுநாளே அவர்களது வீசாக்களைப் பெற்றுக் கொள்கிறார்கள்; ஆயினும், ஒரு சில சூழ்நிலைகளுக்குக் கூடுதலாக நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது, அது தாமதம் ஏற்படுவதில் போய் முடிந்து விடலாம். ஆகவே, உங்கள் வீசாவை நீங்கள் பெற்றுக்கொள்ளும் வரை உங்கள் பயணச் சீட்டை நீங்கள் வாங்கக் கூடாது. உங்களுக்கு வீசா வழங்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டதும், வெள்ளிக்கிழமைகள் தவிர்த்து, உங்களுக்கு நேர்காணல் நடைபெற்ற நாளுக்கு ஒரு வேலை நாளுக்குப் பிறகு தூதரக வாயிலில் மாலை 3:30 மணியளவில் வீசா பெற்றுக் கொள்ளத் தயார்நிலையில் இருக்கும், வெள்ளிக்கிழமைகளில் அவை காலை 10:00 மணியளவில் தயாராக இருக்கும். நேர்காணல் நடைபெற்ற அதே நாளன்றே வீசா வழங்கப்படாது. விண்ணப்பதாரர்கள் தங்களது வீசாக்களைப் பெற்றுக் கொள்வதற்கு நேர்காணல் நாளன்று அவர்களிடம் கொடுக்கப்பட்ட டிக்கெட் எண்ணைக் கொண்டு வர வேண்டும். ஒரு குழுவாக விண்ணப்பிக்கிறார்கள் என்றால், வீசாக்களைப் பெற்றுக் கொள்வதற்கு ஒரே ஒரு நபர் மட்டுமே வரவேண்டும். விண்ணப்பதாரரின் சார்பாக விண்ணப்பதாரர் கையொப்பமிட்டதோர் கடிதத்தை வைத்திருக்கிறார்கள் என்றால், அவர் சார்பாக வேறு யாராவது ஒருவர் வந்து வீசாவைப் பெற்றுக் கொள்ளலாம், ஆனால் அந்த நபர் அவரது சொந்தக் கடவுச்சீட்டு அல்லது தேசிய அடையாள அட்டையைக் கொண்டு வர வேண்டும். 

உங்கள் வீசா விண்ணப்ப நிலை என்னவென்று பாருங்கள்

நீங்கள் குடிவரவாளர் அல்லாததோருக்கான வீசா விண்ணப்பதாரர் என்றால், உங்கள் நேர்காணல் நடைபெற்ற இடத்தையும், உங்கள் பட்டைக்குறியீட்டு எண்ணையும் பதிவு செய்வதன் மூலம் இங்கே நீங்கள் ஆன்லைனில் உங்கள் மற்றும் வீசா விண்ணப்ப நிலையைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

இடங்கள் மற்றும் நேரங்கள்

அமெரிக்கத் தூதரகம் வார நாட்கள் நேரங்கள்
கொழும்பு திங்கள்-வியாழன் 15:30 மணி
வெள்ளி 10:00 மணி