NIV வகைகள் குறித்ததோர் பட்டியல்

இந்தப் பக்கத்தில்:


மேலோட்டம்

அமெரிக்காவிற்கு வருபவர்களை நாங்கள் பத்திரமான எல்லைகள் மற்றும் திறந்த கதவுகளோடு வரவேற்கிறோம். பெரும்பாலான கனடா நாட்டுக் குடியுரிமை பெற்றவர்களும், வீசா தள்ளுபடித் திட்ட நாடுகளிலிருந்து வருகிற அந்நாடுகளின் குடியுரிமை பெற்ற அநேகரும் ஒருசிலத் தேவைகளைச் சந்திக்கிற பட்சத்தில், அவர்கள் வீசா இல்லாமலேயே அமெரிக்காவிற்கு வர முடியும் அத்தேவைகளை இங்கே படித்துப் பார்க்கலாம்.

நீங்கள் ஒரு அமெரிக்கக் குடியுரிமை பெற்றவரோ அல்லது அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக நிரந்தரமாக வசிப்பவரோ இல்லை என்றால், தற்காலிக வருகையாளர்கள் அமெரிக்காவிற்குப் பயணம் செய்வதற்கு அநேக வகையான குடிவரவாளர் அல்லாதோர் வீசாக்கள் இருக்கின்றன. நீங்கள் எண்ணம் கொண்டுள்ள பயணத்தின் நோக்கம் மற்றும் மற்ற யதார்த்தங்கள் ஆகியவை தான் அமெரிக்கக் குடியுரிமைச் சட்டத்தின் கீழ் உங்களுக்கு என்ன வகை வீசா தேவை என்பதைத் தீர்மானிக்கும். பயணத்திற்கு உங்களுக்குத் தேவைப்படும் குடிவரவாளர் அல்லாதோருக்கான வீசா வகை குறித்த தகவல்களையும், அயல்நாட்டில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்தில் அந்த வீசாவிற்கு விண்ணப்பிக்கத் தேவைப்படும் படிகளையும் தெரிந்து வைத்துக் கொள்வது முக்கியமானதாகும்.

உங்களுக்குத் தேவைப்படுகிற வீசா வகையைத் தீர்மானிப்பதற்குக் கீழுள்ள அட்டவணையைப் படித்துப் பாருங்கள். எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்த தகவல்கள் மற்ரும் இன்னும் பல விஷயங்கள் உட்பட, ஒவ்வொரு வீசா வகைக்கும் குறிப்பான இன்னும் அதிக விவரமான தகவல்களுக்கு, கீழுள்ள வீசா வகைக் கட்டத்திலிருந்து ஒரு இணைப்பைத் தேர்ந்தெடுங்கள்.

அமெரிக்காவிற்குப் பயணம் செய்வதன் நோக்கம் மற்றும் குடிவரவாளர் அல்லாதோர் வீசாக்கள் வீசா வகை
தடகள வீரர்கள், கலைஞர்கள், பொழுது போக்கு தருபவர்கள் P
ஆஸ்திரேலியப் பணியாளர் - பிரத்தியேகத் தொழில் நிபுணர் E-3
எல்லை கடக்கும் அட்டை: மெக்ஸிகோ BCC
வியாபார வருகையாளர்கள் B-1
கப்பல்/விமானப் பணியாளர்கள் (அமெரிக்காவில் கடலில் உள்ள கப்பலில் அல்லது விமானத்தில் பணியாற்றுகிறவர்கள்) D
தூதரக அதிகாரிகள் மற்றும் அயல்நாட்டு அரசாங்க அதிகாரிகள் A
வீட்டுப் பணியாளர்கல் அல்லது செவிலித் தாய்கள் (ஒரு அயல்நாட்டுப் பணியமர்த்துபவரோடு உடன் வர வேண்டும்) B-1
நியமித்துள்ள சர்வதேச ஸ்தாபனத்தின் பணியாளர்கள், மற்றும் NATO G1-G5, NATO
பரிமாற்ற வருகையாளர்கள் J
பரிமாற்ற வருகையாளர்கள் - வீட்டு உதவியாளர்கள் J-1
பரிமாற்ற வருகையாளர்கள் - குழந்தைகள் (21 வயதிற்குக் கீழ்) அல்லது J-1 வீசா வைத்திருப்பவரின் வாழ்க்கைத் துணை J-2
பரிமாற்ற வருகையாளர்கள் - பேராசிரியர்கள், கல்விமான்கள், ஆசிரியர்கள் J-1
பரிமாற்ற வருகையாளர்கள் - சர்வதேசக் கலாச்சாரம் J, Q
திருமணம் செய்து கொள்ளப்போகிறவர் K-1
அமெரிக்காவில் பணியமர்த்தப்பட்டுள்ள அந்நிய நாட்டு இராணுவ அதிகாரி A-2, NATO1-6
அறிவியல், கலை, கல்வி, வியாபாரம் அல்லது தடகளத்தில் அசாதாரணத் திறனுள்ள அயல்நாட்டவர்கள் O-1
கட்டுப்பாடற்ற வர்த்தக ஒப்பந்தத் (FTA) தொழில் நிபுணர்கள்: சிலி H-1B1
கட்டுப்பாடற்ற வர்த்தக ஒப்பந்தத் (FTA) தொழில் நிபுணர்கள்: சிங்கப்பூர் H-1B1
தகவல் ஊடகப் பிரதிநிதி (ஊடகம், பத்திரிக்கையாளர்கள்) I
நிறுவனத்திற்குள்ளேயான பணி மாற்றம் பெற்றவர்கள் L
மருத்துவ சிகிச்சை, வருகையாளர்கள் B-2
NAFTA தொழில் முறையிலான பணியாளர்கள்: மெக்ஸிகோ, கனடா TN/TD
சுகாதாரக் கவனிப்பு நிபுணர்கள் குறைவாக உள்ள பகுதிகளுக்குப் பயணம் செய்கிற செவிலியர்கள் H-1C
மருத்துவர்கள் J-1, H-1B
மதப் பணியாளர்கள் R
மிக உயர்ந்த அளவிற்குப் பிரத்தியேக அறிவு அவசியமாகிற துறைகளில் பிரத்தியேகப் பணிகள் H-1B
மாணவர்கள் - கல்வி மற்றும் மொழி மாணவர்கள் F-1
சார்ந்திருக்கும் மாணவர் - F-1 வீசா வைத்திருப்பவரைச் சார்ந்திருப்பவர் F-2
மாணவர்கள் - தொழிற் கல்வி M-1
சார்ந்திருக்கும் மாணவர் - M-1 வீசா வைத்திருப்பவரைச் சார்ந்திருப்பவர் M-2
தற்காலிகப் பணியாளர்கள் - காலாந்திர விவசாயம் H-2A
தற்காலிகப் பணியாளர்கள் - விவசாயம் அல்லாதோர் H-2B
சுற்றுலா, விடுமுறை, உல்லாச வருகையாளர்கள் B-2
முதன்மையாக வேலைவாய்ப்பிற்கல்லாத நிகழ்ச்சிகளில் பயிற்சி H-3
உடன்பாட்டு முதலீட்டாளர்கள் E-2
உடன்பாட்டு வியாபாரிகள் E-1
அமெரிக்காவின் ஊடாகச் செல்பவர்கள் C
ஆட்கடத்தலில் சிக்கிக் கொண்டவர்கள் T-1
குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் U-1
அமெரிக்காவில் வீசா புதுப்பிப்பவர்கள் - A, G, மற்றும் NATO A1-2, G1-4, NATO1-6